பக்கம்-23
டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்காரா?எப்ப வருவார்?
'செத்த' நேரத்துல வந்திடுவார்.!
-------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-45
பக்கம்-45
டாக்டர் இன்னும் எவ்வளவு பேருக்கு ஆப்ரேஷன் பண்ணுவாராம்?
ஏன் கேட்க்குற?
இல்ல...ஒரு நாளைக்கு நாலு பேரான்னு வெட்டியான் அலுத்துக்குறான்!!!!
------------------------------------------------------------------------------------------------------------
ஏன் கேட்க்குற?
இல்ல...ஒரு நாளைக்கு நாலு பேரான்னு வெட்டியான் அலுத்துக்குறான்!!!!
------------------------------------------------------------------------------------------------------------
இப்படி எந்த ஜோக் பக்கத்தை எடுத்தாலும் குறைந்தது ஒரு ஜோக்காவது டாக்டரை பத்தி இருக்கு!இதை பத்தின விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்திருந்தாலும் இதுக்கெல்லாம் சிரிப்போம்!!நாலு பேர்க்கிட்ட சொல்லி humorous ஆனா ஆளுன்னு காமிச்சுப்போம்!
இதே போல் அரசர்களை பற்றி,அரசியல்வாதிகளை பற்றி, ஆசிரியர்களை பற்றி என நிறைய ஜோக்குகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்தும் படித்தும் சிலர் சிரித்தும்
வருகிறோம்!
இதை பற்றி நாம் பெரிதும் சிந்திப்பது இல்லை!அனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எப்படி இருக்கும் என நாம் நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம்.
இது இன்றைய தலையங்கம்!
உலகத்துல முதலில் சொன்ன ஜோக்குகள்ள வர மாதிரி டாக்டர்ஸ் இருந்தா நம்ம நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பார்க்கணும் பாஸ்!
சில நாட்களுக்கு முன் நம்மை உலுக்கிய சம்பவம் ,Dr.அசோகன்-Dr.புஷ்பாஞ்சலி செய்த அந்த தியாகம்தான்!வீரத்தாய் தன் மகனுக்கு விபத்தில் மூளை செயல் இழந்து விட்டது என தெரிந்தவுடன் அவன் எல்லா உறுப்புகளையும் தானம் செய்தாள்!கீழ்க்காணும் வீடியோவை பார்க்கவும்....
இதை பார்த்து இரும்பு நெஞ்சம் கொண்டவர்களுக்கும்(மன வலிமை உடையவர்கள்) கண் கலங்கும் என்று நினைக்கிறேன்!
ஹிதேந்திரன் உடல் தானத்தில் ,அந்த முடிவு எடுக்கப்பட்டதும்,அதை பூர்த்தி செய்ததும், டாக்டர்கள் தான் என்பதை பெருமையாக சொல்லலாம் அல்லவா!!
நமக்கு ஒரு சிறு தலை வலி வந்தாலும்,மயக்கம்,காய்ச்சல் வந்தாலும் முன்று நாட்களுக்கு மிகவும் பய பத்திரமாக மாத்திரை,மருந்துகளை எடுத்து கொள்வோம்!காய்ச்சல் சரியானதும் ,"ஆ!உ!" என்று அனத்திய அதே வாயாலேயே "காச கொடுத்தாதான் தோச வேகும்" என்போம் படுக் கூலாக!!!!
சிற்பி ஒரு சிற்பம் வரைகிறான்...மிகவும் பாடுப்பட்டு மெதுவாக வரைந்து முடிக்கிறான்!வரைந்தப்பின் அவனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்,வாழ்த்துகள். "உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்"என்று மகிழ்கிறான்.இதை பார்த்துவிட்டு ஏதோ ஒரு வேகத்தில் மீனா ,தானும் முயன்று பார்க்கிறாள்!நீங்கள் நினைத்தது சரியே!!சிற்பியின் சிற்ப்பத்திர்க்கு நிகராக அது இல்லை!
ஒரு உயிரற்ற கல்லில் நாம் நினைப்பது போல் வரையமுடியவில்லை....ஏன் அந்த சிற்பிக்கே எல்லா நேரங்களிலும் அது சரியாக அமைவதில்லை!!அப்படியிருக்க ,ஒரு மனிதன் உயிருள்ள மிஷினுடன் விளையாடுவது சாதாரணமா?அதற்காக அவன் எவ்வளவு பாடுப்பட்டு அதை கற்று ,பயிற்சி எடுத்து பின் அந்த வேலையில் இறங்கி இருப்பான்?!
நம்மால் பிறர் சிரித்தால் அது நகைச்சுவை என்றால்,
நம்மால் பிறர் மனம் புண்பட்டால் அது??????
5 Comments:
வித்தியாசமான சிந்தனை... நடப்பு நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து தரும் பாணி கவனத்தை பெறும். வாழ்த்துகள்...!!!
நண்பா.. மருத்துவர்கள் பற்றிய உங்களது கருத்து வரவேற்கத்தக்கது.. ஆனால் அந்தமாதிரியான ஜோக்குகள் சொல்வது உண்மையாகவும் நடந்துக்கிட்டுதானே இருக்கு..
டாக்டர்கள் உயிரைக் காக்கற தெய்வங்கள்.. ஆனால் பேசண்டுகள்கிட்ட அவங்க உண்மையாக நடந்துக்கறதில்லை.. ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் அனுபவங்கள் இருக்கும் மருத்துவர்களைப் பற்றி..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
$நிலாமகள்
நன்றி நிலாமகள்.
எனது துவக்கத்திலேயே உங்களது வருகை மகிழ்ச்சியை தந்தது!
தொடர்ந்து வாருங்கள்!
நன்றி.....
$பதிவுலகில் பாபு
வருக பாபு அண்ணா!
சிலர் நீங்கள் குறிப்பிட்டது போல இருந்திருக்கலாம்!
பலர் இப்போதெல்லாம் அதிகம் பணத்தை வசுலிக்கிறார்கள் என்பது உண்மை!
ஆனால் உயிரை காப்பாற்றாமல் இருப்பதிலேயே!நான் குறிப்பிட்ட இரண்டு ஜோக்குகளுமே 'உயிரை காப்பாற்ற தவறியவர்கள்' என்பது போலவே இருக்கும்....
நீங்கள் கருத்துரைஇட்டது மிக்க மகிழ்ச்சி !தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
விரைவில் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்!
நன்றி...
உயிரை எடுக்கிற டாக்டர்..லஞ்சம் வாங்கிற போலிஸ்..ஆஃபீசில் தூங்கும் ஊழியர்..
இதெல்லாம் இல்லாட்டா ஜோக் செத்தேப் போயிடும்!!
Post a Comment