Pages

எதுக்கு இவ்வளவு Build Up?

          
சமீபத்தில் வந்த படத்தில் ,தனுஷ் விவேக்கிடம் "லூசு மாதிரி பேசாதீங்க பாஸ்" என்பார்.அதற்க்கு விவேக் ,"அப்படியெல்லாம் சொல்லாதப்பா ...எனக்கே டவுட் வருது!" என்பார்.நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம்! யாராவது நம்மை கொஞ்சம் ஆட்ட(!) நினைத்தால் ,அவர்கள் எண்ணத்தை பூர்த்தி செய்ற வகையில் நாம் ஆடித்தான் போகிறோம்!

என்னுடைய தோழி ஒருவள் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவாள்! "நாளைக்கு நம்ம ஊருக்கு சுனாமி வரப்போதாம்!!! நீ நியூஸ் பாக்கல?.......அப்படி வரும்போது நம்ம schoolum  தண்ணியோட போயிடும்!"என்றால்,அவள் "நெஜமாவா சொல்ற.......அப்புடி மட்டும் நடந்தா,12th  எக்ஸாம் எழுதாம சாகும்(!) ஒரே lucky batch நாமளாதான்டி  இருப்போம்!" என்பாள்!

இப்படி சிலர் இருக்க ,தான்தான் பெரிய எல்லாம் தெரிஞ்ச  ஆளுன்னு அலட்டற ஆளுங்க நிறைய பேர பார்க்கலாம்! மேற்சொன்ன
ஆளுங்கள கூட innocent என்று சொல்லலாம்....ஆனால் 'இவர்கள்' அலம்பல் இருக்கே .......உஸ்சப்பா......

இந்த மாதிரி ஆட்களை 'Great Liers' என்று சொல்லலாம்......நேரத்திற்கு ஏற்றார்ப்போல் அவர்கள் பொய் சொல்லும் கில்லாடிகள்! இதில் என்ன காமெடி என்றால் இவர்கள் அனைவரும் 'பெரிய' , 'புதிய'  POLICY களை வைத்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு ,எங்கள் நண்பர் அப்பாவு (பெயரை மாற்றி உள்ளேன்) அங்கில்லை எடுத்துக்கலாம்...அவர் ரிட்டயர்ட் ஆனா பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்தவர்,பக்கத்து வீட்டு பட்டு anty யின் முகத்தில் விழித்தார்!பேசிக்கொண்டே பட்டு சொன்னார்,"எங்க வீட்ல இந்த பாழாப்போன வேப்பமரத்த வெட்ட விடம்மட்டேன்கிறான் கார்ப்பறேஷுன்காரன்.... அதனால வீட்ல வெயில் வரவே மாட்டேன்றது! "
என்று தன்னோட வடவம் காய வைக்க முடியாத நிலைமையை அழாத குறையாக கூற நம்ம அங்கிள் சும்மா இருப்பாரா?உடனே,"ஏ பேர சொல்லுங்க .....அதல்லாம் வழிக்கு வந்திருவான்..."என்று சாதாரணமாக சொல்லிவிட பட்டு anty  ஒரு முறை கார்ப் ஆபிசுக்கு போகும்போது கேட்டும் விட்டார்!"
"கார்ப்பறேஷுன்ல வேல பாத்து ரிட்டயர்ட் ஆனதுக்காக  அவர் சொல்லுவதை எல்லாம் கேக்க நாங்க எதுக்குமா எங்க வேலப்பாக்கணும்?"என்று மானாவாரியாக திட்டியதை அப்பாவுவிடம் சொல்லவா முடியும்?

          இப்படி பலர் தங்களையும் ஏமாத்தி பிறரையும் ஏமாத்திக்கொண்டு இருக்கிறார்கள்.கொள்கை யார் வேணும்னாலும் வைத்துக்கொள்ளலாம் .காசா?பணமா? குடும்ப தலைவர் வேலை முடித்து வந்தால்,அந்த வீடே அமைதியாகிவிடும்! "அப்பா வந்துட்டார் ,போய் படி" என்று மகனிடம் சொல்லிக்கொண்டே கிட்சனை நோக்கி அம்மா வேகமாக ஓடுவார்!அப்பா முறைப்பாக வந்து அமர்ந்து சாப்டுவார்....

கோவிலில் அதுவரை சத்தமிட்டு கொண்டிருந்த பக்தர்கள் ஐயர் வந்தவுடன்......ப்பா 'புயலுக்கு பின் அமைதி!'.ஐயர் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் பெருமையாக சன்னதிக்குள் நுழைவார்.


Life is Learning
 
            பேசுவதில்,சிரிப்பதில்,நடப்பதில்,எழுதுவதில்,............என இந்த மாதிரி விஷயங்களில் ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பழக்கம்! அது அவர்கள் nature .ஆனால் நாமாகவே உருவாக்கி கொள்ளும் இந்த பாலிசிகள்,வீராப்புகள்,சம்பர்தாயங்கள், அனாவசியமானது..வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை நாம் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டுதான் இருக்க வேண்டும் .கற்றால்,நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.நமை மாற்றி கொள்ள 'இவை' தடையாக இருக்கும்.

இம்மாதிரி ஜோக்குகள் எல்லாம் வரவேற்க்கத்தக்கனவா????

பக்கம்-23
             டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்காரா?எப்ப வருவார்?
'செத்த'  நேரத்துல வந்திடுவார்.!
-------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-45
டாக்டர் இன்னும் எவ்வளவு பேருக்கு  ஆப்ரேஷன் பண்ணுவாராம்?
ஏன் கேட்க்குற?
இல்ல...ஒரு நாளைக்கு நாலு பேரான்னு வெட்டியான் அலுத்துக்குறான்!!!!

 ------------------------------------------------------------------------------------------------------------
                   இப்படி எந்த ஜோக் பக்கத்தை எடுத்தாலும் குறைந்தது ஒரு ஜோக்காவது டாக்டரை பத்தி இருக்கு!இதை பத்தின விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்திருந்தாலும் இதுக்கெல்லாம் சிரிப்போம்!!நாலு பேர்க்கிட்ட சொல்லி humorous ஆனா ஆளுன்னு காமிச்சுப்போம்!

                   இதே போல் அரசர்களை பற்றி,அரசியல்வாதிகளை பற்றி, ஆசிரியர்களை  பற்றி என  நிறைய  ஜோக்குகளை  நாம்  அன்றாட வாழ்க்கையில் பார்த்தும் படித்தும் சிலர் சிரித்தும்
வருகிறோம்! 

                   
இதை பற்றி நாம் பெரிதும் சிந்திப்பது இல்லை!அனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எப்படி இருக்கும் என நாம் நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம்.

                
'இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.1.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய ஜப்பானியர்கள் தாற்காலிக முகாம்களில் சோதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.'

இது இன்றைய தலையங்கம்!                  
உலகத்துல முதலில் சொன்ன  ஜோக்குகள்ள வர மாதிரி டாக்டர்ஸ் இருந்தா நம்ம நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பார்க்கணும் பாஸ்!

சில நாட்களுக்கு முன்  நம்மை உலுக்கிய சம்பவம் ,Dr.அசோகன்-Dr.புஷ்பாஞ்சலி செய்த அந்த தியாகம்தான்!வீரத்தாய்  தன்  மகனுக்கு   விபத்தில் மூளை செயல் இழந்து விட்டது என தெரிந்தவுடன் அவன் எல்லா உறுப்புகளையும் தானம் செய்தாள்!கீழ்க்காணும் வீடியோவை பார்க்கவும்....

         இதை பார்த்து இரும்பு நெஞ்சம் கொண்டவர்களுக்கும்(மன வலிமை உடையவர்கள்) கண் கலங்கும் என்று நினைக்கிறேன்!
ஹிதேந்திரன் உடல் தானத்தில் ,அந்த முடிவு எடுக்கப்பட்டதும்,அதை பூர்த்தி செய்ததும், டாக்டர்கள் தான் என்பதை பெருமையாக சொல்லலாம் அல்லவா!!

          நமக்கு ஒரு சிறு தலை வலி வந்தாலும்,மயக்கம்,காய்ச்சல் வந்தாலும் முன்று நாட்களுக்கு மிகவும் பய பத்திரமாக மாத்திரை,மருந்துகளை எடுத்து கொள்வோம்!காய்ச்சல் சரியானதும் ,"ஆ!உ!" என்று அனத்திய அதே வாயாலேயே "காச கொடுத்தாதான் தோச வேகும்" என்போம் படுக் கூலாக!!!!

           சிற்பி ஒரு சிற்பம் வரைகிறான்...மிகவும் பாடுப்பட்டு மெதுவாக வரைந்து முடிக்கிறான்!வரைந்தப்பின் அவனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்,வாழ்த்துகள்.  "உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்"என்று மகிழ்கிறான்.இதை பார்த்துவிட்டு ஏதோ ஒரு வேகத்தில் மீனா ,தானும் முயன்று பார்க்கிறாள்!நீங்கள் நினைத்தது சரியே!!சிற்பியின் சிற்ப்பத்திர்க்கு நிகராக அது இல்லை!

         ஒரு உயிரற்ற கல்லில் நாம் நினைப்பது போல் வரையமுடியவில்லை....ஏன் அந்த சிற்பிக்கே எல்லா நேரங்களிலும் அது சரியாக அமைவதில்லை!!அப்படியிருக்க ,ஒரு மனிதன் உயிருள்ள மிஷினுடன் விளையாடுவது சாதாரணமா?அதற்காக அவன் எவ்வளவு பாடுப்பட்டு அதை கற்று ,பயிற்சி எடுத்து பின் அந்த வேலையில் இறங்கி இருப்பான்?!

                        நம்மால் பிறர் சிரித்தால்  அது நகைச்சுவை என்றால்,
நம்மால் பிறர் மனம் புண்பட்டால் அது??????