எதுக்கு இவ்வளவு Build Up?

          
சமீபத்தில் வந்த படத்தில் ,தனுஷ் விவேக்கிடம் "லூசு மாதிரி பேசாதீங்க பாஸ்" என்பார்.அதற்க்கு விவேக் ,"அப்படியெல்லாம் சொல்லாதப்பா ...எனக்கே டவுட் வருது!" என்பார்.நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம்! யாராவது நம்மை கொஞ்சம் ஆட்ட(!) நினைத்தால் ,அவர்கள் எண்ணத்தை பூர்த்தி செய்ற வகையில் நாம் ஆடித்தான் போகிறோம்!

என்னுடைய தோழி ஒருவள் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவாள்! "நாளைக்கு நம்ம ஊருக்கு சுனாமி வரப்போதாம்!!! நீ நியூஸ் பாக்கல?.......அப்படி வரும்போது நம்ம schoolum  தண்ணியோட போயிடும்!"என்றால்,அவள் "நெஜமாவா சொல்ற.......அப்புடி மட்டும் நடந்தா,12th  எக்ஸாம் எழுதாம சாகும்(!) ஒரே lucky batch நாமளாதான்டி  இருப்போம்!" என்பாள்!

இப்படி சிலர் இருக்க ,தான்தான் பெரிய எல்லாம் தெரிஞ்ச  ஆளுன்னு அலட்டற ஆளுங்க நிறைய பேர பார்க்கலாம்! மேற்சொன்ன
ஆளுங்கள கூட innocent என்று சொல்லலாம்....ஆனால் 'இவர்கள்' அலம்பல் இருக்கே .......உஸ்சப்பா......

இந்த மாதிரி ஆட்களை 'Great Liers' என்று சொல்லலாம்......நேரத்திற்கு ஏற்றார்ப்போல் அவர்கள் பொய் சொல்லும் கில்லாடிகள்! இதில் என்ன காமெடி என்றால் இவர்கள் அனைவரும் 'பெரிய' , 'புதிய'  POLICY களை வைத்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு ,எங்கள் நண்பர் அப்பாவு (பெயரை மாற்றி உள்ளேன்) அங்கில்லை எடுத்துக்கலாம்...அவர் ரிட்டயர்ட் ஆனா பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்தவர்,பக்கத்து வீட்டு பட்டு anty யின் முகத்தில் விழித்தார்!பேசிக்கொண்டே பட்டு சொன்னார்,"எங்க வீட்ல இந்த பாழாப்போன வேப்பமரத்த வெட்ட விடம்மட்டேன்கிறான் கார்ப்பறேஷுன்காரன்.... அதனால வீட்ல வெயில் வரவே மாட்டேன்றது! "
என்று தன்னோட வடவம் காய வைக்க முடியாத நிலைமையை அழாத குறையாக கூற நம்ம அங்கிள் சும்மா இருப்பாரா?உடனே,"ஏ பேர சொல்லுங்க .....அதல்லாம் வழிக்கு வந்திருவான்..."என்று சாதாரணமாக சொல்லிவிட பட்டு anty  ஒரு முறை கார்ப் ஆபிசுக்கு போகும்போது கேட்டும் விட்டார்!"
"கார்ப்பறேஷுன்ல வேல பாத்து ரிட்டயர்ட் ஆனதுக்காக  அவர் சொல்லுவதை எல்லாம் கேக்க நாங்க எதுக்குமா எங்க வேலப்பாக்கணும்?"என்று மானாவாரியாக திட்டியதை அப்பாவுவிடம் சொல்லவா முடியும்?

          இப்படி பலர் தங்களையும் ஏமாத்தி பிறரையும் ஏமாத்திக்கொண்டு இருக்கிறார்கள்.கொள்கை யார் வேணும்னாலும் வைத்துக்கொள்ளலாம் .காசா?பணமா? குடும்ப தலைவர் வேலை முடித்து வந்தால்,அந்த வீடே அமைதியாகிவிடும்! "அப்பா வந்துட்டார் ,போய் படி" என்று மகனிடம் சொல்லிக்கொண்டே கிட்சனை நோக்கி அம்மா வேகமாக ஓடுவார்!அப்பா முறைப்பாக வந்து அமர்ந்து சாப்டுவார்....

கோவிலில் அதுவரை சத்தமிட்டு கொண்டிருந்த பக்தர்கள் ஐயர் வந்தவுடன்......ப்பா 'புயலுக்கு பின் அமைதி!'.ஐயர் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் பெருமையாக சன்னதிக்குள் நுழைவார்.


Life is Learning
 
            பேசுவதில்,சிரிப்பதில்,நடப்பதில்,எழுதுவதில்,............என இந்த மாதிரி விஷயங்களில் ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பழக்கம்! அது அவர்கள் nature .ஆனால் நாமாகவே உருவாக்கி கொள்ளும் இந்த பாலிசிகள்,வீராப்புகள்,சம்பர்தாயங்கள், அனாவசியமானது..வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை நாம் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டுதான் இருக்க வேண்டும் .கற்றால்,நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.நமை மாற்றி கொள்ள 'இவை' தடையாக இருக்கும்.

9 Comments:

Jayadev Das said...

\\ஆனா பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்தவர்,பக்கத்து வீட்டு பட்டு anty யின் முகத்தில் விழித்தார்!பேசிக்கொண்டே பட்டு சொன்னார்,"எங்க வீட்ல இந்த பாழாப்போன வேப்பமரத்த வெட்ட விடம்மட்டேன்கிறான் கார்ப்பறேஷுன்காரன்.... அதனால வீட்ல வெயில் வரவே மாட்டேன்றது! "\\அடப் பாவிங்காளா, நிறைய மரம் வைங்க, இருக்கும் மரத்தை காப்பாத்துங்கடா.......

இன்னுமொரு கோணம் said...

$Jayadev தாஸ்

உங்கள் வருகைக்கு நன்றி!

இலை மறைக்காயாக சொல்லப்படும் சில நுணுக்கமான விஷயங்களைக்கூட சரியாக புரிந்துக்கொள்ளப்படுவது மகிழ்ச்சி!

குறுகிய வட்டத்தில் நின்றுக்கொண்டு உலகை பார்ப்பவர்களுக்கு சான்று அது.....

நன்றி

தொடர்ந்து வாசித்து வாருங்கள்!

Unknown said...

பதிவுலகில் வளம் வர வாழ்த்துக்கள் !

Anisha Yunus said...

hmm...
verundra aarambichutteenga kalakkunga :))

இன்னுமொரு கோணம் said...

$ஆகாயமனிதன்..

நன்றி!

இன்னுமொரு கோணம் said...

$அன்னு

உங்கள் வலைப்பூ பார்த்தேன்......
நன்றாக இருக்கிறது!

நேரம் கிடைக்கையில் புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன்!
தொடர்ந்து எனது வலைப்பூவுக்கு வாங்க!
பிடித்திருந்தால் உங்கள் வோட்டையையும் போடுங்க...

இராஜராஜேஸ்வரி said...

.....நேரத்திற்கு ஏற்றார்ப்போல் அவர்கள் பொய் சொல்லும் கில்லாடிகள்//
True.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..பிரமாதமாய் இருக்கே!

Yaathoramani.blogspot.com said...

இல்லாதவன் இருப்பதுபோல் காட்டிகொள்வதில்
கிடைப்பது சொரியக் கிடைக்கிற அற்ப சுகம்
அது ஒரு நோய்
மிக சரியாக அதை பதிவிட்டிருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Post a Comment